லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் முன்னாள் வீரர் எரிக் கெண்டனா ஐரோப்பிய காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் விருதைப் பெறவுள்ளார்.
மேன்யூ குழுவிற்காக 143 ஆட்டங்களில் விளையாடி, 64 கோல்களைப் போட்டுள்ளார் கெண்டனா.
யுனைடெட் குழுவில் ஐந்து ஆண்டுகள் இருந்த கெண்டனா, நான்கு முறை பிரிமியர் லீக் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் காற்பந்து அறநிறுவனங்களுக்கு நிதியளிக்கும் முன்னெடுப்பு முயற்சிகளுக்கும் ஆதரவு அளித்துள்ளார்.
இந்த விருது, "அபாரமான சாதனைகள், தொழில்முறை நேர்த்தி, முன்மாதிரியான தனிப்பட்ட குணங்கள் ஆகியவற்றை அங்கீகரிப்பதாக," சம்மேளனம் கூறியது.

