மிலானில் லுக்காகு முதல் கோல்

மிலானில் லுக்காகு முதல் கோல்

1 mins read

மிலான்: இத்தாலிய காற்பந்துக் குழுவான இண்டர் மிலானில் இணைந்த பெல்ஜியம் வீரர் ரொமேலு லுக்காகு அக்குழுவில் தனது முதல் கோலைப் பதிவு செய்தார்.

மிலான் குழுவிற்காக அவர் ஆடிய முதல் ஆட்டம் இது.

யுனைடெட் குழுவிற்காகத் தான் விளையாடிய 96 ஆட்டங்களில் 42 கோல்கள் போட்டிருந்தார் லுக்காகு இப்பருவத்தின் தொடக்கத்தில் மிலானிடம் விற்கப்பட்டார். இத்தாலிய லீக் தொடரின் போட்டியொன்றில் லெச் குழுவிற்கு எதிராக விளையாடியது மிலான்.

10 பேருடன் விளையாடிய லெச் குழுவை 4-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது மிலான்.