ஜோகோவிச், செரினா வில்லியம்ஸ் ஆகியோர் அமெரிக்க பொது விருது டென்னிஸ் போட்டியின் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர். உலகின் முதல்நிலை வீரர் செர்பியாவின் ஜோகோவிச் முதல் சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த ராபர்ட்டோ கார்பெலி 6-4, 6-1, 6-4 என்ற நேர்செட் களில் வீழ்த்தினார். பெண்கள் பிரிவில் செரினா வில்லியம்ஸ், மரியா ஷரபோவாவை எதிர் கொண்டார். இதில் செரினா வில்லியம்ஸ் 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் ஷர போவாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.வீனஸ் வில்லியம்சும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
அடுத்த சுற்றில் ஜோகோவிச், செரினா, வீனஸ்
1 mins read

