கடன் அடிப்படையில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் அலெக்சிஸ் சான்செஸ் இத்தாலிய குழுவான இண்டர் மிலானுக்கு செல்ல விருக்கிறார்.
ஐரோப்பிய காற்பந்து விளையாட்டாளர்களை வாங்கும், விற்கும் காலக்கட்டம் வரும் திங்கள் அன்று முடிவடைவதற்குள், இந்த ஒப்பந்தம் கைகூடும் என்று இண்டர் மிலான் நிர்வாகி எண்ட்டோனியோ கோண்ட்டே நம்பிக்கை கொண்டுள்ளார்.
ஒப்பந்தம் நிறைவேறினால், தமதுடன் மான்செஸ்டர் யுனைடெட் குழுவில் ஆடிய முன்னாள் ஆட்டக்காரர் லுக்காக்குவுடன் சான்செஸ் இணைவார்.
கடன் ஒப்பந்தத்தின் படி, ஒப்பந்தம் முடிந்த பிறகு சான்செஸ்சை நிரந்தரமாக வாங்குவதற்கு இண்டர் மிலான் எந்த நிபந்தனையும் இடவில்லை.
மான்செஸ்டர் யுனைடெட் குழுவை சேர்ந்ததிலிருந்து சான்செஸ்ஸின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. அவர்களுக்கு ஆடிய 45 ஆட்டங்களில், அவர் 5 முறை மட்டுமே கோல் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

