'அருண் ஜெட்லி' மைதானம் என பெயர் மாற்றம் காண்கிறது 'பெரோஸ் ஷா கோட்லா'

'அருண் ஜெட்லி' மைதானம் என பெயர் மாற்றம் காண்கிறது 'பெரோஸ் ஷா கோட்லா'

1 mins read

புதுடெல்லி: டெல்லியின் 'பெரோஸ் ஷா கோட்லா' கிரிக்கெட் மைதானமான 'அருண் ஜெட்லி' மைதானம் எனப் பெயர் மாற்றப்படும் என அறிவிக்கப்படடுள்ளது.

டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா அனைத்துலக கிரிக்கெட் மைதானத்தை டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நிர்வகித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சரான அருண் ஜெட்லி (படம்) காலமானார்.

அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.

டெல்லி கிரிக்கெட் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பெரோஸ் ஷா கோட்லா பெயர் அருண் ஜெட்லி என மாற்றப்படும் என டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிடிசிஏ தலைவர் ரஜத் ஷர்மா கூறுகையில் ''டெல்லி கிரிக்கெட் சங்க முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அவரின் பெயரைச் சூட்டுவதைவிட சிறப்பானது என்னவாக இருக்க முடியும்.

"விராத் கோஹ்லி, சேவாக், காம்பீர், ஆசிஷ் நெஹ்ரா, ரிஷப பன்ட் மற்றும் பல்வேறு வீரர்கள் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் அளவில் உயர்வதற்கு அருண் ஜெட்லி காரணமாக இருந்துள்ளார்'' என்றார்.