85 வயதில் ஓய்வை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்

85 வயதில் ஓய்வை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்

2 mins read
dcc7f5d6-1d5e-4c43-80d5-e67e7ab71bfb
தமது 60 ஆண்டு கிரிக்கெட் வாழ்வில் 7,000 விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிசில் ரைட். படம்: இணையம் -

கிங்ஸ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிசில் ரைட் தனது 85வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் மற்றும் பிராங்க் வோரெல் ஆகியோருடன் சிசில் ரைட்டின் பெயர் இடம் பெறாது.

ஆனால், அதிக காலம் கிரிக்கெட்டில் நீடித்ததில் சிசில் பெயர் நிச்சயம் இடம்பெறும்.

அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான சிசில், அடுத்த இரண்டு வாரங்களில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

சிசில், தமது உயரிய காலத்தில் பார்பேடாஸுக்கு எதிராக ஜமைக்காவை பிரதிநிதித்தார்.

1970களின் பிற்பகுதியிலும் 1980களின் முற்பகுதியிலும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான ரிச்சர்ட்ஸ் மற்றும் ஜோயல் கார்னருடன் விளையாடிய ரைட், 60 ஆண்டுகளில் 7,000 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு தருணத்தில் 5 பருவங்களில் 538 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒவ்வொரு 27 பந்துகளிலும் ஒரு விக்கெட் எனும் விகிதத்தில் இவர் விளையாடியுள்ளார்.

தமது ஓய்வு குறித்து சிசில் கூறுகையில், "என்னுடைய நீண்ட நாள் கிரிக்கெட் வாழ்க்கைக்கான காரணம் தெரியும். ஆனால் அதை வெளியில் சொல்லமுடியாது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் அனைத்தையும் சாப்பிடுவேன். ஆனால் குடிக்க மாட்டேன்.

"உடல் வலி ஏற்படும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் சுறுசுறுப்பாக இருப்பேன். இதுவரை ஒரே இடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்ததுக்கூட இல்லை. அது எனக்குப் பிடிக்காது.

அதற்குப் பதிலாக நடைப்பயிற்சி மேற்கொள்வேன்," எனக் கூறினார்.