ஓய்வை அறிவித்த சாதனையாளர்

ஓய்வை அறிவித்த சாதனையாளர்

1 mins read
9f6798ad-bc8e-4c00-897e-cad157ecdaec
லங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் -

கொழும்பு: ஒரு காலத்தில் இந்திய அணியை மிரள வைத்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ், 34, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் மிக விரைவில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனைக்குச் சொந்தக்காரர் இவர். 19 போட்டிகளிலேயே இந்த மைல்கல்லை எட்டிய இவர், அனைத்துலக டி20 போட்டிகளில் இருமுறை ஆறு விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். ஒட்டுமொத்தத்தில், இவர் இலங்கை அணிக்காக 288 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.