லீக் கிண்ணம்: பெனால்டி வாய்ப்புகளில் வென்ற லெஸ்டர் சிட்டி

லீக் கிண்ணம்: பெனால்டி வாய்ப்புகளில் வென்ற லெஸ்டர் சிட்டி

1 mins read
2a7c62c5-b3fe-42d6-90d2-335e097bfe65
கோல் அடிக்க முற்படும் லெஸ்டர் சிட்டியின் அயோஸெ பெரெஸ். படம்: ராய்ட்டர்ஸ் -

ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தபோதும் பெனால்டி வாய்ப்புகளில் 4-2 என்ற கணக்கில் நியூகாசல் யுனைடெட் குழுவைத் தோற்கடித்து, இங்கிலிஷ் லீக் கிண்ணத்தின் மூன்றாம் சுற்றில் அடியெடுத்து வைத்தது லெஸ்டர் சிட்டி. 34வது நிமிடத்தில் லெஸ்டர் சிட்டியின் ஜேம்ஸ் மேடிசன் கோலடிக்க, 53வது நிமிடத்தில் பதில் கோலடித்தார் நியூகாசல் குழுவின் ஜப்பான் வீரர் யோஷினோரி மியூட்டோ. நேற்று அதிகாலை நடந்த இன்னோர் ஆட்டத்தில் எவர்ட்டன் 4-2 என்ற கோல் கணக்கில் லின்கன் சிட்டியை வீழ்த்தியது. (படத்தில்) கோல் அடிக்க முற்படும் லெஸ்டர் சிட்டியின் அயோஸெ பெரெஸ். படம்: ராய்ட்டர்ஸ்