பென் ஸ்டோக்ஸ்: ஆ‌ஷஸ் தொடரைக் கைப்பற்றினால் மட்டுமே திருப்தி

பென் ஸ்டோக்ஸ்: ஆ‌ஷஸ் தொடரைக் கைப்பற்றினால் மட்டுமே திருப்தி

1 mins read

சிட்னி: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 359 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் இழக்காமல் 135 ஓட்டங்கள் குவிக்க, இங்கிலாந்து ஓர் ஓட்டத்தில் அதிரடி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து 'சேஸிங்' செய்த தலைசிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. அதேபோல் பென் ஸ்டோக்ஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்சும் இதுவாகும். ஆனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றன. ஓர் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. 1-1 என இரு அணிகளும் சமமாக உள்ள நிலையில், ஆஷஸ் தொடரை வென்றால்தான் ஹெட்டிங்லி டெஸ்டில் சிறப்பாக விளையாடிய திருப்தி கிடைக்கும் என்றார் ஸ்டோக்ஸ். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஹெட்டிங்லியில் இருந்த ஒரு வாரமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. ஆஷஸ் தொடரை கைப்பற்றாவிடில், வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை எவ்வாறு உணர முடியும். ஆஷஸ் தொடரை வென்றால் மட்டுமே உண்மையிலேயே நான் திருப்தியடைவேன்,'' என்றார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டோனி இல்லை