மும்பை: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ நேற்று அறிவித்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டோனி, குல்தீப், சகல், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பெறவில்லை. பந்தடிப்பு வீரர்களில் டோனிக்குப் பதில் ரிஷப் பன்ட் பெயர் இடம்பெற்றுள்ளது. ஹார்திக் பாண்டியா பெயர் புவனேஸ்வர் குமாருக்குப் பதில் சேர்க்கப்பட்டுள்ளது.
பந்துவீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர் இல்லை என்பதால் அணியில் கலீல் அகமெட், நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப், சாஹல் இல்லை என்பதால் ஜடேஜா, குருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், 'லெக் பிரேக்' பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

