தோல்வியை தவிர்க்க வேண்டிய நெருக்கடியில் ஆர்சனல், ஸ்பர்ஸ்

தோல்வியை தவிர்க்க வேண்டிய நெருக்கடியில் ஆர்சனல், ஸ்பர்ஸ்

2 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரில் ஆர்சனல், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுக்கள் ஏற்கெனவே தலா ஒரு தோல்வியைச் சந்தித்துவிட்டதால், கடும் நெருக்கடிக்கு மத்தியில் சிங்கப்பூர் நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு மோதுகின்றன.

நடப்பு பருவத்தின் தொடக்கத்திலேயே இரண்டாவது முறையாக தோல்வியுறுவது மிகவும் அபாயகரமானது என்பதை ஆர்சனல், ஸ்பர்ஸ் குழுவின் நிர்வாகிகளான உனை எம்ரியும் பொக்கடீனோவும் நன்கு அறிவர்.

கடந்த வாரம் லிவர்பூலிடம் ஆர்சனல் 1-3 எனத் தோற்றது. சிட்டியிடம் சமநிலை கண்ட ஸ்பர்ஸ் குழுவை ஒரு கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூகாசல். இதனால் பட்டியலில் ஏழாம் இடத்திற்கு இறங்கியுள்ள ஸ்பர்சுக்கு இன்றைய ஆட்டத்தில் ஆர்சனலைவிட நெருக்கடி அதிகம்.

இரு குழுக்களும் பிரிமியர் லீக் பட்டம் வெல்வதற்கு போட்டி போடவில்லை என்ற போதும் நடப்பு பருவத்திலும் ஆதிக்கம் செலுத்தி வரும் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் குழுக்களுடனான புள்ளி இடைவெளி அதிகமாவதைத் தவிர்க்க விரும்புகின்றன.

தாக்குதல் ஆட்டக்காரர்களைத் தேர்வு செய்வதில் ஆர்சனல் நிர்வாகி எம்ரி. லிவர்பூலுக்கு எதிரான ஆட்டத்தில் அலெக்சாண்டர் லாகசெட்டிற்கு வாய்ப்பளிக்கப்படாதது ஸ்பர்சுக்கு பின்னடைவானது என்கிறார்கள் ரசிகர்கள்.

அதே போல், நிக்கோலஸ் பெப், டேனி சிபலோஸ் இருவரும் லிவர்பூலின் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறினர்.

என்றாலும் இன்று கடும் நெருக்கடிக்கு மத்தியில் விளையாடவுள்ள ஸ்பர்ஸ் குழுவிற்கு எதிராக பெப், சிபலோஸ் இருவரையும் களமிறக்கி எம்ரி மீண்டும் சோதித்து பார்க்கக்கூடும்.

ஆனால் முக்கிய தற்காப்பு வீரர்களான கைல் வாக்கர், யுவான் ஃபோத் ஆகிய இருவரும் இல்லாததுஸ்பர்ஸ் நிர்வாகி பொக்கடீனோவிற்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் டான்குவே நொடெம்பிளே இல்லாதது ஸ்பர்சின் பின்வரிசையை பலவீனப்படுத்தியுள்ளது.

ஒரு வேளை எரிக் டியர் காயத்தில் இருந்து குணமடைந்து குழுவிற்குத் திரும்பும் பட்சத்தில் ஸ்பர்சின் தற்காப்புச் சற்று பலப்படும்.

இதற்கிடையே, புள்ளி விவரங்கள் ஆர்சனலுக்குச் சாதகமாக உள்ளன.

லீக் போட்டியில் இதற்கு முன் 26 முறை ஆர்சனலை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட ஸ்பர்ஸ் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆர்சனலின் சொந்த மைதானம் என்று மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாக ஸ்பர்ஸ் வெளிநாட்டு மண்ணில் தடுமாறி வருவதும் ஆர்சனலுக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.