'பங்ளாதேஷ் வெளியேறியதற்கு அணித் தலைவரே காரணம்'

'பங்ளாதேஷ் வெளியேறியதற்கு அணித் தலைவரே காரணம்'

1 mins read

டாக்கா: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்ளாதேஷ் அணியின் ஷாகிப் அல் ஹசன் 9 போட்டிகளில் 606 ஓட்டங்கள் குவித்தார். இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் அவர் 3வது இடம் பிடித்தார்.

என்றாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் பங்ளா

தேஷ் அணி உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறியது.

இதுகுறித்து ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் "ஒரு வீரர் சிறப்பாக விளையாடாதபோது, அணி எப்படி விளையாடியது என்பதை காட்டிலும், தன்னுடைய செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

"இதே விஷயம் மோர்தசாவுக்கு நடந்தது. அணித் தலைவர் சிறப்பாக விளையாடாத போது, அவருக்கும் பிரச்சனை. அணிக்கும் பிரச்சனை," என்றார்.