நியூயார்க்: அமெரிக்க பொது விருது டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் செரினா வில்லியம்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் கரோலினா முச்கோவாவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். நான்காம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலப் 6-2, 3-6, 6-7 என்ற செட் கணக்கில் 116ஆம் நிலை வீராங்கனையான டெய்லர் டவுன்சென்டிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஆடவர் பிரிவில் ஜோகோவிச் அமெரிக்காவின் டெனிசை 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று 4வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

