இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம்

இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம்

2 mins read
7bfc4796-2b14-4ac4-8ee9-72b517734520
விராட் கோஹ்லி முதல் பந்தில் 'டக் அவுட்' ஆகி அதிர்ச்சி அளித்தார். ராகுல் 6, மாயங்க் அகர்வால் 4, புஜாரா 27 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர். அப்போது ஹனுமா விஹாரி-ரஹானே இணை கை கொடுத்தது. இருவரும் நிலைத்து நின்று ஆடினர். அரைசதமும் கடந்தனர். ரஹானே 64, ஹனுமா விஹாரி 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  -

கிங்ஸ்டன்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரஹானே - ஹனுமா விஹாரி சிறப்பாக ஆடி இரண்டாம் இன்னிங்க்ஸில் அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். இவர்கள் இருவரும் இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.

இந்த டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்ததும் இவர்கள்தான். முதல் டெஸ்ட் வெற்றிக்கு காரணமும் இவர்கள் இருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 416 ஓட்டங்கள் எடுத்தது. கோலி 76, மாயங்க் அகர்வால் 55 ஓட்டங்கள் எடுத்தாலும் இந்திய அணி பெரிய ஓட்ட எண்ணிக்கையை எட்ட முக்கிய காரணம் ஹனுமா விஹாரி தான். ஹனுமா விஹாரி அபாரமாக ஆடி போட்டியை தம் கையில் எடுத்துக்கொண்டு சதம் அடித்தார். 225 பந்துகளில் 111 ஓட்டங்கள் எடுத்தார்.

டெஸ்ட் போட்டியின் பந்தடிப்பாளர் எப்படி ஆடவேண்டுமோ அப்படி எந்த பதற்றமும் இன்றி நிதானமாக ஆடினார். நவீன கிரிக்கெட்டின் டி20 ஷாட்களை எல்லாம் முயற்சி செய்யவில்லை. இந்தியா 299 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கினாலும் 36 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

விராட் கோஹ்லி முதல் பந்தில் 'டக் அவுட்' ஆகி அதிர்ச்சி அளித்தார். ராகுல் 6, மாயங்க் அகர்வால் 4, புஜாரா 27 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர். அப்போது ஹனுமா விஹாரி-ரஹானே இணை கை கொடுத்தது. இருவரும் நிலைத்து நின்று ஆடினர். அரைசதமும் கடந்தனர். ரஹானே 64, ஹனுமா விஹாரி 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியா 168 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. 468 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆடத் துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்தியா வெற்றிக்கு அருகே உள்ளதாகவே கருதப்படுகிறது.