டோனியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த கோஹ்லி 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியதுடன் மற்றொரு சாதனையும் இந்தப் போட்டியில் படைக்கப்பட்டுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் தலைமையில் இந்திய அணி மொத்தம் 60 டெஸ்ட் போட்டிகளில் 27ல் வெற்றி பெற்றிருந்தது.


தற்போதைய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் தலைமையில் இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில் 28 வெற்றிகளை இந்திய அணி பெற்றிருப்பது புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.


இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளிக்கு இடையிலான தொடரின் இரண்டாவது போட்டி திங்கட்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்றது. அதில் வெஸ்ட் இண்டிஸ் அணி 210 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’ ஆனது. இதனையடுத்து இந்திய அணி 257 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணித்தலைவர்கள் பட்டியலில் முன்னாள் அணித் தலைவர் டோனியின் சாதனையை கோஹ்லி தகர்த்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.


நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 12 வீரர்களும் பந்தடித்தனர். இதன் மூலம் அனைத்துலக கிரிக்கெட் வரலாற்றில், ஒரே இன்னிங்சில் முதல் முறையாக 12 வீரர்கள் பந்தடித்த அணி என்ற புது வரலாறு படைத்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!