இந்தியா அதிரடி; திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணி

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்று இந்தியா கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகள் மோதிய இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களைக் குவித்தது. விகாரி 111 ஓட்டங்களும் அணித் தலைவர் விராத் கோஹ்லி 76 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும் கார்ன்வால் 3 விக்கெட்டுகளையு கைப்பற்றினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ஓட்டங்கள் எடுத்து திணறிய நிலையில் இருந்தது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி மேலும் 30 ஓட்டங்கள் எடுப்பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 47.1 ஓவர்களில் 117 ஓட்டங்களில் சுருண்டது.

ஹெட்மயர் அதிகபட்சமாக 34 ஓட்டங்கள் எடுத்தார். பும்ரா 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முகம்மது ‌ஷமி 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 299 ஓட்டங்கள் முன்னிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 57 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியது. அகர்வால் 4 ஓட்டங்களிலும் ராகுல் 6 ஓட்டங்களிலும் விராத் கோஹ்லி ஓட்டம் எதுவும் எடுக்காமலும் ரோச் வீசிய பந்தில் ஆட்டமிழந்தனர். புஜாரா 27 ஓட்டங்களில் ஹோல்டர் பந்தில் ஆட்டம் இழந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு ரகானே - விகாரி ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

விஹாரி 67 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 50 ஓட்டங்களையும் ரகானே 91 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 50 ஓட்டங்களையும் தொட்டனர். ரகானே 19வது அரை சதத்தையும் விஹாரி மூன்றாவது அரை சதத்தையும் பதிவு செய்தனர். இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்து இருந்தபோது ஆட்டத்தை ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 468 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ரகானே 109 பந்துகளில் 64 ஓட்டங்களும் (8 பவுண்டரிகள், ஒரு சிக்சர்), விஹாரி 76 பந்துகளில் 53 ஓட்டங்களும் (8 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கீமார் ரோச் 3 விக்கெட்டுகளையும் ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். இதைத் தொடர்ந்து, 468 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாவது நாள் ஆட்டம் முடிவில் 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 45 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேம்ப்பெல் 16 ஓட்டங்களிலும் பிராத்வெய்ட் 3 ஓட்டங்களிலும் நடையைக் கட்டினர். டேரன் பிராவோ 18 ஓட்டங்களுடனும் ஷமார் புரூக்ஸ் 4 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

நேற்று முன்தினம் நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது. மேலும் 423 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்து ஆடியது. அதில் களம் இறங்கிய டேரன் பிராவோ, புரூக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை எடுத்தனர். டேரன் பிராவோ 23 ஓட்டங்கள் எடுத்தநிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய புரூக்ஸ் அரை சதத்தைக் கடந்த நிலையில் ‘ரன் அவுட்’ முறையில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 210 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் சார்பில் முகம்மது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து, இந்திய அணி 257 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக முதல்முறையாக சதத்தைப் பதிவு செய்த ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணித் தலைவராக டோனியின் (27 வெற்றிகள்) முந்தைய சாதனையை, கோஹ்லி (28 வெற்றிகள்) முறியடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் நியூசிலாந்து (60), இலங்கை (60), ஆஸ்திரேலியா (32), இங்கிலாந்து (32) அணிகள் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!