டெல்லி அணிக்கு மாறும் அஸ்வின்

டெல்லி அணிக்கு மாறும் அஸ்வின்

1 mins read

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஆர் அஸ்வின், 32, ஐபிஎல் டி20 தொடரின் அடுத்த பருவத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடக்கூடும்.

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன்மூலம் முதலில் டி20, பின் ஒருநாள், டெஸ்ட் எனப் படிப்படியாக மூவகை ஆட்டங்களிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக உருவெடுத்தார் அஸ்வின்.

இந்நிலையில், கடந்த இரு பருவங்களில் இவரது தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால், அவரை டெல்லி அணிக்கு விற்க பஞ்சாப் அணி நிர்வாகம் இணங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் அஸ்வினுக்கு விளையாட வாய்ப்புத் தரப்படவில்லை.