மான்செஸ்டர்: இப்பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி பட்டத்துக்காகப் போட்டியிடும் ஆகச் சிறந்த குழுக்கள் பட்டியலில் மான்செஸ்டர் யுனைடெட் இடம்பெறாவிட்டால் அதற்கு நிர்வாகி ஒலே குனார் சோல்சியார்தான் காரணம் என்று அக்குழுவின் மத்தியதிடல் ஆட்டக்காரர் நிமென்யா மெட்டிச் தடாலடியாகக் கூறியுள்ளார்.
புதிய பருவத்தில் மடிச் இது வரை 22 நிமிடங்களுக்கு மட்டுமே விளையாடியுள்ளார். அதிலும் மாற்று ஆட்டக்காரராக அவர்கள மிறங்கினார்.
யுனைடெட் ஆகக் கடைசியாக 2013ஆம் ஆண்டில் பிரிமியர் லீக் பட்டத்தை வென்றது. தற்போது அது நான்கு ஆட்டங்கள் விளையாடிய நிலையில் லீக் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் லிவர்பூலை விட அது ஏழு புள்ளிகள் பின்தங்கி உள்ளது. "பட்டம் வெல்ல முனைப்புடன் போராடும் ஆட்டக்காரர்கள் கொண்ட குழுவை நிர்வாகி தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வா று செய்யா விட்டால் அதனால் வெற்றி பெற முடியாமல் போகும் பட்சத்தில் அதற்கு அவரே பொறுப்பே வேண்டும். நான் பல ஆண்டுகளாகக் காற்பந்து விளையாடி வருகிறேன்.
கடந்த பத்து ஆண்டுகளில் பல குழுக்களுக்காகவும் கிட்டத்தட்ட எல்லா ஆட்டங்களிலும் களமிறங்கி இருக்கிறேன். நான் விளையாட வே ண்டுமானால் யாராவது ஓர் ஆட்டக்காரர் மாற்று ஆட்டக்காரராக அமர்ந்திருக்க வேண்டும். இப்போது நான் அதைச் செய்து கொண்டிருக்கிறேன். "முதல் இரண்டு அல்லது மூன்று ஆட்டங்களில் என்னை சோல்சியார் தேர்ந்தெடுக்கவில்லை . நான் என்னால் முடிந்தவரை கடுமையாக உழைக்கிறேன். சோல்சியார் எடுத்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அவர் எடுத்த முடிவு தவறு என்பதை அவருக்கு உணர்த்துவது எனது கடமையாகும். என்னை மீண்டும் முதல் 11 ஆட்டக்கார்களில் ஒருவராகக் களமிறக்கச் செய்ய வேண்டும்.
"எனக்கும் சோல்சியாருக்கும் இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை. அவர் எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை என்று அவரிடமே நான் தெரிவித்திருந்தேன்.
ஆனால் குழுவுக்கான ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவரிடம் மட்டும் இருந்ததையும் நான் கூறினேன்," என்று மெட்டிச் தெரிவித்தார்.

