மான்செஸ்டர்: அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் பந்தடிப்பாளர் தரவரிசையில் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், அதற்குத் தாம் மிகவும் பொருத்தமானவர் என்பதை நிரூபித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியின் முதல் இன்னிங்சில் ஸ்மித் 211 ஓட்டங்களை விளாசினார். இது இவருக்கு 3வது இரட்டைச் சதம். இந்த மூன்றுமே இங்கிலாந்து அணிக்கெதிராக அடிக்கப்பட்டதுதான். இவரது அபார பந்தடிப்பால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 497 ஓட்டங்களை எடுத்து 'டிக்ளேர்' செய்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ஓட்டங்களை எடுத்திருந்தது. மழை காரணமாக நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவது தாமதமானது.

