முன்னாள் பிரேசில் வீரரின் மகன் மாரடைப்பால் மரணம்

முன்னாள் பிரேசில் வீரரின் மகன் மாரடைப்பால் மரணம்

1 mins read

சாவ் பாலோ: பிரேசில் காற்பந்து அணியின் முன்னாள் தலைவர் கஃபுவின் மூத்த மகன் டேனிலோ ஃபெலிசியானோ டி மொராயஸ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 30.

தமது வீட்டிற்கு அருகே நண்பர்களுடன் காற்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது டேனிலோவுக்கு உடல்நலக்

குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆயினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஐரோப்பிய காற்பந்துச் சங்க ஒன்றியமும் (யூஃபா) ரியால் மட்ரிட், ஏசி மிலான் ஆகிய குழுக்களும் டேனிலோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.

1994, 2002ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணம் வென்று தந்த கஃபு, தற்போது 2022 உலகக் கிண்ணத்திற்கான யூஃபா தூதராக இருக்கிறார்.