4 பந்துகளில் 4 விக்கெட்: மலிங்கா அபார சாதனை

பல்லேகெலே: இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பல்லேகெலேயில் நடைபெற்றது.

முதலில் பந்தடித்த இலங்கை 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் சேர்த்தது.

அதை அடுத்து நியூசிலாந்து பந்தடித்தது.

மூன்றாவது ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கொலின் முன்றோ ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை மலிங்கா படைத்தார்.

அடுத்து வந்த ருதர்ஃபோர்டு ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து கிராண்ட்ஹோம் மலிங்காவிடம் சிக்கி ஆட்டமிழந்தார்.

ஹாட்ரிக் சாதனையுடன் நின்றுவிடாமல் அடுத்த வந்த ராஸ் டெய்லரையும் மலிங்கா ஆட்டமிழக்கச் செய்து நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்து சாதனை படைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!