பெண்கள் டி20 உலகக் கிண்ணம்: களமிறங்கும் தாய்லாந்து மகளிர்

பெண்கள் டி20 உலகக் கிண்ணம்: களமிறங்கும் தாய்லாந்து மகளிர்

1 mins read

பேங்காக்: பெண்கள் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தாய்லாந்தும் பங்ளாதேஷ் அணியும் தகுதி பெற்றுள்ளன. பெண்கள் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதிலிருந்து மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இப்போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் பாப்புவா நியூகினி அணியை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தாய்லாந்து தகுதி பெற்றுள்ளது. அதேபோல் பங்ளாதேஷ், அயர்லாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.