செரீனாவை வீழ்த்திய இளம் வீராங்கனை

செரீனாவை வீழ்த்திய இளம் வீராங்கனை

1 mins read
8bbe4d98-48c9-4435-8c54-5a2f745c410c
முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு. படம்: இபிஏ -

நியூயார்க்: முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்சை வீழ்த்தி, முதன் முறையாக அமெரிக்கப் பொது விருது பட்டத்தை வென்றார் 19 வயதேயான கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்கப் பொது விருது மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஆண்ட்ரீஸ்கு, 23 முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான செரீனாவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் ஆண்ட்ரீஸ்குவின் புயல் வேக ஆட்டத்திற்கு செரீனாவால் ஈடுகொடுக்க முடியவில்லை.

ஆண்ட்ரீஸ்கு முதல் செட்டை 6-3 என மிக எளிதாக கைப்பற்றினாலும் இரண்டாவது செட் அவ்வளவு எளிதாக அவர் வசம் ஆகவில்லை.

கடும் போராட்டத்திற்குப் பின் 7-5 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றி, ஆண்ட்ரீஸ்கு அமெரிக்கப் பொது விருதுப் பட்டத்தை வென்றார். அத்துடன், இப்பட்டத்தை வெற்றி கொண்ட முதல் கனடிய வீராங்கனை என்ற பெருமைக்கும் அவர் சொந்தக்காரரானார்.

ரஷ்யாவின் மரியா ஷரபோவாவிற்குப் பிறகு இப்பட்டத்தைக் கைப்பற்றிய பதின்ம வயது வீராங்கனையும் இவர்தான்.