ஹேரி கேன் ‘ஹாட்ரிக்’ கோல்; இங்கிலாந்து தொடர்ந்து முதலிடம்

லண்டன்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழு வீரர் ஹேரி கேனின் ஹாட்ரிக் கோலால் பல்கேரியாவை வீழ்த்திய இங்கிலாந்து, ‘யூரோ 2020’ தகுதிச் சுற்றின் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.

நேற்று அதிகாலை நடந்த இப்போட்டியில், 24வது நிமிடத்திலேயே ஹேரி கேன் கோல் போட்டுவிட்டாலும் முற்பாதி ஆட்டம் மந்தமாகவே இருந்தது. பிற்பாதியின் தொடக்கத்தில் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் மீதான தப்பாட்டம் காரணமாக இங்கிலாந்திற்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் கேன்.

55வது நிமிடத்தில் கேன் அனுப்பிய பந்தை ஸ்டெர்லிங் கோலாக்க, இங்கிலாந்தின் கோல் எண்ணிக்கை மூன்றானது.

73வது நிமிடத்தில் கிடைத்த இன்னொரு பெனால்டி வாயப்பை யும் கேன் வீணடிக்கவில்லை.

கடந்த 2017-18 பருவத்தில் இங்கிலாந்து, ஸ்பர்ஸ் குழுக்கள் சார்பில் தனக்குக் கிடைத்த பத்து பெனால்டி வாய்ப்புகளில் ஒன்பதை கோலாக மாற்றினார் கேன்.

இறுதியில், 4-0 என பல்கேரியாவை வீழ்த்திய இங்கிலாந்து இதுவரை நடந்த மூன்று ஆட்டங்களிலும் மொத்தம் 14 கோல்கள் போட்டு அனைத்திலும் வாகை சூடியுள்ளது.

தனது அடுத்த தகுதிச் சுற்று ஆட்டத்தில் நாளை கொசோவாவை இங்கிலாந்து எதிர்கொள்கிறது.

‘பி’ பிரிவு ஆட்டமொன்றில் செர்பியாவை 4-2 என வீழ்த்திய போர்ச்சுகல், மீண்டும் முன்னேற்றப் பாதைக்குத் திரும்பியுள்ளது.

வில்லியம் கார்வெலோ, கோன்சாலோ குவடெஸ், ரொனால்டோ, பெர்னார்டோ சில்வா ஆகியோர் ஆளுக்கு ஒரு கோல் போட்டு போர்ச்சுகலை வெற்றி பெறச் செய்தனர்.

இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஐந்து புள்ளிகளைப் பெற்றுள்ள போர்ச்சுகல், ‘பி’ பிரிவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள உக்ரேன் 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

அல்பேனியாவை வீழ்த்திய பிரான்ஸ், ‘எச்’ பிரிவில் முதலிடத்தை வலுவாக்கிக்கொண்டது.

கிங்ஸ்லி கோமன் இரு கோல்களைப் போட, அறிமுக வீரர் ஜோனதன், ஒலிவியர் ஜிரூ இருவரும் ஆளுக்கு ஒரு கோல் போட்டனர். அல்பேனியா தரப்பில் ஒரு கோல் மட்டுமே விழுந்தது.

இறுதியில், 4-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!