கிரிக்கெட் வாரியத்திடம் தினேஷ் கார்த்திக் மன்னிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி இருக்கிறார் அவ்வணி வீரரான தினேஷ் கார்த்திக்.

ஐபிஎல் கிரிக்கெட் அணியான கோல்கத்தா நைட் ரைடர்சின் தலைவராக இருக்கும் தினேஷ் கார்த்திக், பிசிசிஐயின் ஒப்பந்தப் பட்டியலில் உள்ளார்.

கோல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான், கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் டிரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார்.

இந்நிலையில், டிரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணி ஆடிய போட்டியைக் காண முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலமுடன் அந்த அணியின் சீருடையை அணிந்துகொண்டு் சென்றுள்ளார் தினேஷ் கார்த்திக்.

ஆனால் இதற்காக இவரோ அல்லது கோல்கத்தா அணி நிர்வாகமோ பிசிசிஐயிடம் முறையான அனுமதி பெறவில்லை.

இந்நிலையில், டிரின்பேகோ அணி வீரர்களின் அறையில் கார்த்திக் இருக்கும் புகைப்படங்

களைப் பார்த்த பிசிசிஐ, “ஒப்பந்தப் பட்டியலில் இருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது?” என விளக்கம் கேட்டு தினேஷ் கார்த்திக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, கார்த்திக் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “பிசிசிஐயின் அனுமதி பெறாமல் அங்கு சென்றதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி அந்த அணி தொடர்பான எவ்வித செயல்பாடுகளிலும் பங்கேற்க மாட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!