டென்னிஸ்: 4வது முறையாக நடாலுக்கு பட்டம்

நியூயார்க்: அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கடுமையாக போராடிய ஸ்பானிய வீரர் ரஃபாயல் நடால், ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவை வீழ்த்தி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெற்றியாளர் பட்டத்துக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நட்சத்திர வீரர் நடாலும் மெட்வதேவும் பலப்பரீட்சை நடத்தினர்.

இப்போட்டி தனக்கு மிகவும் சவாலாக இருக்கும் என நடால் ஏற்கெனவே கூறியிருந்தார். அதுபோலவே, போட்டியின் தொடக்கம் முதலே நடாலுக்குக் கடும் சவால் அளிக்கும் வகையில் பந்துகளைத் தெறிக்கவிட்டார் மெத்வதேவ். எனினும், நடால் தனது அனுபவமிக்க ஆட்டத்தினால் மெட்வதேவ் தொடுத்த வீச்சுகளைத் திறம்படச் சமாளித்து ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

முதல் இரண்டு செட்களையும் எந்தவிதத் தடங்கலும் இன்றி நடால் கைப்பற்றினார். அதன் பின்னர் எழுச்சி பெற்ற மெட்வதேவ், ஆக்ரோஷமாக விளையாடி புள்ளிகளைக் குவிக்க, போட்டியில் விறுவிறுப்பும் பரபரப்பும் அதிகரித்தன.

நடால் செய்த சிறுசிறு தவறுகளைத் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மெட்வதேவ், அடுத்தடுத்து இரு செட்களைக் கைப்பற்றி அசத்தினார். இதனால், நடாலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனவே, இறுதி செட்டில் பதற்றமின்றி மிகவும் கவனமாக அவர் ஆடினார். கடும் போராட்டத்திற்கு மத்தியில் ஐந்தாவது செட்டை நடால் கைப்பற்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் நீடித்த இப்போட்டியில், 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றினார். இது நடால் வென்ற 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

இந்த ஆட்டத்தில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு கிட்டிய வெற்றியை எண்ணி நடால் உணர்ச்சிவசப்பட்டார்.

“எனது டென்னிஸ் விளையாட்டுப் பருவத்திலேயே உணர்ச்சிபூர்வமான தருணங்களில் இதுவும் ஒன்று. இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று,” என ரசிகர்கள் முன்னிலையில் அவர் உருக்கமாகக் கூறினார்.

அமெரிக்க ஓபன் தொடரில் நான்காவது முறையாக வெற்றியாளர் பட்டத்தை நடால் வென்றுள்ளார். இன்னும் ஒரு ‘கிராண்ட் ஸ்லாம்’ பட்டத்தை இவர் வென்றால், ரோஜர் ஃபெடரரின் உலகச் சாதனையைச் (20 கிராண்ட் ஸ்லாம்) சமன் செய்வார்.

தற்போது 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் ஃபெடரர் முதலிடத்தில் உள்ளார். பதினாறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் நோவாக் ஜோக்கோவிச் மூன்றாவது இடத்திலும் 14 பட்டங்களுடன் பீட் சாம்ப்ராஸ் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!