காற்பந்து: ஸ்பெயின், இத்தாலி, சுவிஸ் வீரர்களின் முகங்களில் வெற்றிப் புன்னகை

கிஹோன்: யூரோ 2020 காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய குழுக்கள் வெற்றி பெற்றுள்ளன.

தனது சொந்த மண்ணில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஃபரோ தீவுகளை 4-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தையும் கணக்கில் சேர்த்தால் தகுதிச் சுற்றில் மொத்தம் ஆறு ஆட்டங்களில் ஸ்பெயின் வென்றுள்ளது. ‘எஃப்’ பிரிவில் ஏழு புள்ளிகளை அது பெற்றுள்ளது. அப்பிரிவில் இரண்டாம் நிலையில் உள்ள சுவீடன், நார்வேயுடனான ஆட்டத்தில் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.

மற்றோர் ஆட்டத்தில் பின்லாந்தை 2-1 எனும் கோல் கணக்கில் இத்தாலி வென்றது. ‘ஜே’ பிரிவில் இத்தாலி இதுவரை விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் வென்று 18 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஜிப்ரால்டர் குழு உடனான மற்றோர் ஆட்டத்தில் 4-0 எனும் கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து வாகை சூடியது. ‘டி’ பிரிவில் ஆக பலவீனமான குழுவாக ஜிப்ரால்டர் கருதப்படுகிறது.

அதே பிரிவில் ஜார்ஜியாவுக்கு எதிரான மற்றோர் ஆட்டத்தில் கோல் எதுவும் போட முடியாமல் டென்மார்க் சமநிலை கண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!