மெஹிதி ஹசன் நீக்கம்

டாக்கா: பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான், ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடருக்கான அணியில் இருந்து மெஹிதி ஹசன் நீக்கப்பட்டுள்ளார்.

பங்ளாதேஷ் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்தது. இதில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில் பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான், ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 13ஆம் தேதி தொடங்குகிறது.

 இதற்கான பங்ளாதேஷ் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மெஹிதி ஹசன் நீக்கப்பட்டுள்ளார்.