உலக வெற்றியாளரான பிரான்சின் வளரும் வீரராக கோமன்

பாரிஸ்: ‘எச்’ பிரிவு யூரோ தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் அண்டோரா குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் நேற்று பிரான்ஸ் வென்றது. வளர்ந்து வரும் நட்சத்திரமான பிரெஞ்சு தாக்குதல் ஆட்டக்காரர் கிங்ஸ்லி கோமன், இந்த ஆட்டத்தில் ஒரு கோல் போட்டதோடு குழுவின் வெற்றிக்கு முக்கியமானவராக விளங்கினார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அவர் எதிரணி வலையை நோக்கி அனுப்பிய பந்து கோல் கம்பத்தின் மீது பட்டு திரும்பியதற்குப் பதிலாக வலைக்குள் புகுந்திருந்தால் அவரது பெயரில் கோல் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கக்கூடும்.

உலகக் கிண்ண வெற்றியாளரான பிரான்ஸ், ‘எச்’ பிரிவில் ஆறு ஆட்டங்கள் விளையாடிய நிலையில் 15 புள்ளிகளுடன் இரண்டாவது நிலையில் உள்ளது. தகுதிச் சுற்று ஆட்டங்களில் காற்பந்துச் சக்தியாக உருவெடுத்து வரும் துருக்கி, முதலிடம் வகிக்கிறது.

கடந்த ஜூன் மாதம் இஸ்தான்புல் நகரில் துருக்கியிடம் பிரான்ஸ் தோல்வி கண்டது. அடுத்த மாதம் பாரிசில் இவ்விரு குழுக்களும் மீண்டும் மோதவிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!