ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற வீராங்கனை

லண்டன்: லண்டனில் நடைபெற்ற உலக உடற்குறையுள்ளோர் நீச்சல் போட்டியில் தேசிய வீராங்கனை யிப் பின் சியூ தங்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 100 மீட்டர் மல்லாந்து பாணி நீச்சலில் அவர் முதலிடம் பிடித்தார்.

இரண்டாவது இடத்தை கனடாவின் அலி வேன் விக் ஸ்மார்ட்டும் மூன்றாவது இடத்தை இத்தாலியின் ஏஞ்சலா பிரோசிடாவும் பிடித்தனர்.

2010ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் ஐன்ட்ஹோவன் நகரில் நடைபெற்ற உலக நீச்சல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் யிப் தங்கம் வென்றார்.

அதே ஆண்டில் 50 மீட்டர் மல்லாக்க நீச்சலில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2013ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற போட்டியில் 50 மீட்டர் மல்லாந்து பாணி நீச்சல் போட்டியிலும் யிப் வெள்ளி வென்றார்.

ஒன்பது ஆண்டுகள் கழித்து, தற்போது மீண்டும் உலக நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற பெருமை அவரைச் சேரும்.

“உலக வெற்றியாளர் பட்டத்தை வென்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நான் 15 ஆண்டுகளாக நீச்சல் போட்டிகளில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் இந்த வெற்றி சிறப்பிடம் பெறுகிறது.

“எனது அயராத உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக நான் இதைக் கருதுகிறேன்,” என்று நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான யிப் கூறினார்.

யிப்பிற்குத் தசை தொடர்பான குறைபாடு உள்ளது குறிப் பிடத்தக்கது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மெர்செடிஸ் அணியின் ஓட்டுநருமான லுவிஸ் ஹேமில்டன். படம்: ஊடகம்

21 Sep 2019

‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு ஹேமில்டன் குறி

ஆட்டம் முடிய 17 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது யுனைடெட்டின் வெற்றி கோலைப் போட்ட பதின்மவயது வீரர் மேசன் கிரீன்வுட் (நடுவில்).
அஸ்தானாவின் தற்காப்பு ஆட்டக்காரர்களும் கோல்காப்பாளரும் தம்மை நெருங்குவதற்குள் பந்தை வலைக்குள் இவர் அனுப்பினார். இதன்மூலம் யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். படம்: ராய்ட்டர்ஸ்

21 Sep 2019

அஸ்தானாவின் பிடிவாதத்தை தகர்த்தெறிந்த கிரீன்வுட் கோல்

எதேச்சை பாணி 53 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத். படம்: வினே‌ஷ் டுவிட்டர்

21 Sep 2019

வினேஷ் போகத் தங்கம் வெல்ல முனைப்பு