பத்மவிபூஷனுக்கு மேரி கோம் பெயர் பரிந்துரை

புதுடெல்லி: இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அதற்கு அடுத்தப்படியாக பத்ம விபூ‌ஷன் விருது வழங்கப்படு கிறது.

இந்த நிலையில், 2020ஆம் ஆண்டுக்கான பத்மவிபூ‌ஷன் விருதுக்குக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பெயரை இந்திய விளையாட்டுத் துறை அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் விளையாட்டு வீராங்கனை எனும் பெருமை மேரி கோமைச் சேரும்.

மேரி கோம் ஏற்கெனவே பத்மஸ்ரீ விருதை 2006ஆம்் ஆண்டும் பத்மபூ‌ஷன் விருதை 2013ஆம் ஆண்டும், வென்றவர்.
 

Loading...
Load next