ஐந்துக்கு ஐந்து: லிவர்பூல் வெற்றிநடை

ஐந்துக்கு ஐந்து: லிவர்பூல் வெற்றிநடை

1 mins read
d86d44f1-43fd-4545-8a54-35ec5e19b204
லிவர்பூலுக்காக இரு கோல்களை அடித்த சாடியோ மானே (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ் -

கடந்த முறை ஒரே ஒரு புள்ளியில் கைவிட்டுப்போன இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை இம்முறை தொடக்கத்திலிருந்தே கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது லிவர்பூல் காற்பந்துக் குழு. ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் அக்குழு 3-1 என்ற கோல் கணக்கில் நியூகாசல் யுனைடெட்டை வீழ்த்தியது. இதன்மூலம் இதுவரை நடந்துள்ள ஐந்து ஆட்டங்களிலும் வென்று, பதினைந்து புள்ளிகளுடன் பட்டியலில் முதல் நிலையை லிவர்பூல் வலுவாக்கிக்கொண்டது. மாறாக, 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு லிவர்பூலை அதன் சொந்த அரங்கில் வீழ்த்த வேண்டும் என்ற நியூகாசலின் கனவு கானல் நீராகவே இருந்து வருகிறது.