டாக்கா: பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், நஜிபுல்லா சட்ரானின் அதிரடி ஆட்டத்தால் ஸிம்பாப்வே அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். பூவா தலையாவில் வென்ற ஸிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து, 198 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஸிம்பாப்வே அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

