‘அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்பாக 30 போட்டிகளே உள்ளதால் கிடைக்கும் வாய்ப்பை இளைய வீரர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்காக இந்திய அணியை ஆயத்தப்படுத்தும் பணியை அணி நிர்வாகம் தொடங்கிவிட்டது.

இந்நிலையில், ஏராளமான போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என மெத்தனமாகக் கருதக்

கூடாது என்றும் கிடைக்கும் வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கோஹ்லி கூறினார்.

“டி20 தொடருக்கு முன் நாம் இன்னும் 30 போட்டிகளில் விளையாட உள்ளோம். அணியின் பார்வையில் எல்லாம் தெளிவாக உள்ளன. இந்திய அணியில் நான் இடம்பிடித்தபோதுகூட 15 வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததில்லை.

“நான்கு அல்லது ஐந்து வாய்ப்புகள் கிடைத்தால்கூட கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். அந்த மாதிரியாக உயர்நிலை விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறோம்.

“ஒவ்வொரு வீரரும் இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அணி அந்த மனநிலையில்தான் உள்ளது. கிடைக்கும் வாய்ப்பைக் கெட்டியாக பிடித்துக்கொண்டு அணியில் தங்களுக்கான இடங்களை வீர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதை நுட்பமாகக் கையாள வேண்டும். ஆனால், 30 போட்டிகளே உள்ளதால் வாய்ப்பை விரைவில் கைப்பற்ற வேண்டும்,’’ என்றார் கோஹ்லி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!