விட்டுக்கொடுக்காமல் போராடி சமநிலை கண்ட வெஸ்ட் ஹேம்

விட்டுக்கொடுக்காமல் போராடி சமநிலை கண்ட வெஸ்ட் ஹேம்

1 mins read
96f9e79a-f3f3-4523-bca2-856a335c4014
எதிரணியின் கோல் முயற்சியை முறியடித்த வெஸ்ட் ஹேம் கோல்காப்பாளர் லூக்கஸ் ஃபேபியேன்ஸ்கி (வலது) படம்: ராய்ட்டர்ஸ் -

பெர்மிங்ஹாம்: ஆஸ்டன் வில்லாவுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி 23 நிமிடங்களுக்கு வெறும் பத்து ஆட்டக்காரர்களுடன் விளையாடியபோதும் விட்டுக்கொடுக்காமல் போராடிய வெஸ்ட் ஹேம் தோல்வி அடையாமல் ஒரு புள்ளியைப் பெற்றது. ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.

ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்ற வெஸ்ட் ஹேம்மின் ஆர்தர் மசுவாக்குவுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து வெற்றி கோலைத் தேடி ஆஸ்டன் வில்லா தாக்குதல்களை நடத்தியது.

ஆனால் கொஞ்சம்கூட அசராமல் விளையாடிய வெஸ்ட் ஹேம் எதிரணியின் கோல் முயற்சிகளை முறியடித்தது.

ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது கோல் போட ஆஸ்டன் வில்லாவுக்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது.

மாற்று ஆட்டக்காரர் டக்ளஸ் லூயிஸ் பெனால்டி எல்லைக்குள் அனுப்பிய பந்தை வலைக்குள் சேர்க்கத் தவறினார் ஜாக் கிரீலிஷ்.

சமநிலை கண்டது குறித்து வெஸ்ட் ஹேம் மகிழ்ச்சி தெரிவித்தது. "ஒரு புள்ளி கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. முற்பாதி ஆட்டத்தில் நாங்கள் சற்று மெதுவாக விளையாடினோம்.

"பிற்பாதி ஆட்டத்தில் எங்களது ஆட்டக்காரர் வெளியேற்றப்பட்டதும் ஆட்டம் சவால்மிக்கதானது. இருப்பினும், நாங்கள் சரணடையவில்லை," என்று வெஸ்ட் ஹேம் வீரர் டிக்லன் ரைஸ் கூறினார்.