இந்திய மல்யுத்த வீரர்கள் ஏமாற்றம்

இந்திய மல்யுத்த வீரர்கள் ஏமாற்றம்

1 mins read

நூர்சுல்தான்: உலக மல்யுத்தப் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான கிரிகோ ரோமன் பிரிவில் 77 கிலோ உடல் எடைப்

பிரிவில் இந்திய வீரர் குர்பிரீத் சிங் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் செர்பியாவின் விக்டோர் நெம்சிடம் போராடி வீழ்ந்தார்.

60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் 10-0 என்ற புள்ளிக் கணக்கில் மால்டோவா வீரர் விக்டர் சிபானுவிடம் தோல்வி கண்டார். 130 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் நவீன், கியூபாவின் ஆஸ்கார் பினோ ஹின்ட்சைக்கிடம் 9-0 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றார்.