லிவர்பூல் நிர்வாகி கிளோப்: வாய்ப்புகளை வீணடித்தோம்

நேப்பல்ஸ்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இத்தாலியக் குழுவான நேப்பொலியிடம் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இரண்டு கோல்கள் விட்டுக்கொடுத்து தோல்வியைத் தழுவிய தமது குழுவினர் மீது லிவர்பூல் நிர்வாகி யகர்ன் கிளோப் விரக்தியடைந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை பின்னிரவில் நேப்பொலியின் சான் பாலோ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ஹேண்டர்சனின் தப்பாட்டத்தால் நேப்பொலிக்கு பெனால்டி வாய்ப்புக் கிட்டியது.

அதை ஜோசெ கேலஜன் கோலாகக்கிய பின் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஃபெர்னாண்டோ லோரண்டே, லிவர்பூல் தற்காப்பு வீரர் வேன் டைக் செய்த தவற்றால் இரண்டாவது கோலைப் போட்டதால் நேப்பொலி 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி வாகை சூடியது.

இதன்மூலம் 1994ஆம் ஆண்டிற்கு பிறகு வெற்றியாளர் குழு ஒன்று அடுத்த பருவ சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் மண்ணைக் கவ்வியது இதுவே முதல் முறை என்பது நினைவுகூரத்தக்கது.

இந்தத் தோல்வியால் தமக்கு ஏற்பட்ட வருத்தத்தைக் கூறிய கிளோப், “இதனால் ஏற்பட்ட காயம் சாதாரணமானதல்ல, ஏனெனில் எங்கள் குழுவுக்கும் ஏராளமான வாய்ப்புகள் இருந்தன.

“இது இரு தரப்புக்கும் வாய்ப்புகள் நிரம்பிய ஓர் ஆட்டம். ஆனால், எங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் வீணடித்துவிட்டோம். அதுதான் எங்களது பிரச்சினை.

“அதுவும் இரண்டாவது பாதி ஆட்டம் இரு தரப்பும் ஓடியாடி தாக்குதலில் ஈடுபட்டன,” என்று தமது விரக்தியை வெளிப்படுத்தினார்.

நேற்றைய ஆட்டத்தில் ராபர்ட்சனுக்கு எதிராக நேப்பொலிக்கு பெனால்டி வழங்கப்பட்டதும் கிளோப்புக்கு அதிருப்தியைத் தந்தது.

“அது பெனால்டி வழங்க வேண்டிய தப்பாட்டம் என நான் நினைக்கவில்லை. ராபர்ட்சன் கேலஜனைத் தொடும் முன்னரே அவர் வீழ்கிறார். என்னைப் பொறுத்தவரை அது பெனால்டியே அல்ல.

“ஆனால், நடுவரின் முடிவை எங்களால் மாற்ற முடியாது,” என்று அவர் பொருமினார்.

இரண்டு கடைசி கட்ட கோல்களால் கார்லோ அன்சிலோட்டியின் நேப்பொலி குழு பெற்ற வெற்றி, சென்ற காற்பந்துப் பருவத்தின் இதே கட்டடத்தில் லிவர்பூலுக்கு எதிராக நேப்பொலி பெற்ற வெற்றியை நினைவுபடுத்துவதாக காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதுபற்றிக் கூறும் அன்சிலோட்டி, “ஒரு குழுவாக தாக்குதல் தொடுக்க, தற்காத்து விைளயாட நாங்கள் பயிற்சி செய்தோம். இரண்டாவது கோல் வரும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஏனெனில், அந்த நிலையில் நாங்கள் ஒரு கோல் முன்னிலை ெபற்றிருந்தோம். அதனால், எங்களால் முன்னேறித் தாக்க முடிந்தது.

“மற்ற நேரங்களில் இவ்வாறு செய்ய முடியாது. எங்களை அடையாளப்படுத்தும் வகையில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம்.

“எமது வீரர்கள் விளையாடிய விதம் என்ைனக் கவர்ந்தது. அதேசமயம், கெடுபிடியாக விளையாட வேண்டிய நேரத்தில் நாங்கள் கெடுபிடியாகவும் விளையாடினோம்,” என்று கூறினார்.

செல்சி, பார்சிலோனாவுக்கு தடுமாற்றம், ஏமாற்றம்

மற்றோர் ஆட்டத்தில் வெலன்சியாவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது. செல்சியின் சொந்த அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்சிக்கு ஒரு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது. எனினும், அதை கோலாக்காமல் வீணடித்தார் ரோஸ் பார்க்லி.

வேறோர் ஆட்டத்தில் பார்சிலோனா குழுவுக்காக மீண்டும் லயனல் மெஸ்ஸி களமிறங்கினாலும் அந்தக் குழுவினரால் பொருசியா டோர்ட்மண்டை வெல்ல முடியாமல் போக அந்த ஆட்டம் கோல் ஏதும் இன்றி சமநிலையில் முடிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!