ஆர்சனல் நிர்வாக இயக்குநர்: எமெரி மீது முழு நம்பிக்கை

ஆர்சனல் நிர்வாக இயக்குநர்: எமெரி மீது முழு நம்பிக்கை

1 mins read
1e510b23-d573-4103-8c4e-acdaa83982d0
ஆர்சனலின் செயல்பாடு குறித்து காற்பந்து விமர்சகர்களிடையே அதிருப்தி ஏற்பட்ட போதிலும் அக்குழுவின் நிர்வாகி உனாய் எமெரிக்கு  (படத்தில்) ஆதரவாக ஆர்சனலின் நிர்வாக இயக்குநர் வினாய் வெங்கடேஷம் பேசியுள்ளார். -

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் கடந்த வாரயிறுதியில் வாட்ஃபர்ட் குழுவுடனான ஆட்டத்தில் 2-2 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் சமநிலை கண்டது. பட்டியலில் கடைசி நிலையில் உள்ள வாட்ஃபர்ட் குழுவை வென்றிருக்க வேண்டிய ஆர்சனல், 2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தும் அதன் தற்காப்பு ஆட்டத்தில் ஏற்பட்ட குறைபாட்டால் இரு கோல்களை வாட்ஃபர்ட் போட்டது.

ஆர்சனலின் செயல்பாடு குறித்து காற்பந்து விமர்சகர்களிடையே அதிருப்தி ஏற்பட்ட போதிலும் அக்குழுவின் நிர்வாகி உனாய் எமெரிக்கு ஆதரவாக ஆர்சனலின் நிர்வாக இயக்குநர் வினாய் வெங்கடேஷம் பேசியுள்ளார்.

அடுத்த பருவம் ஆர்சனலை சாம்பியன்ஸ் லீக்கிற்கு எமெரிக் வழிநடத்துவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்பெயின் நாட்டவரான எமெரியின் ஒப்பந்தம் இந்தப் பருவத்தின் இறுதியில் முடிவடைந்தாலும் அதை இன்னோர் ஆண்டுக்கு நீட்டிக்க ஆர்சனல் முற்படலாம் என்று வெங்கடேஷம் கூறினார்.

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றுக்கு வருகை புரிந்த அவர், நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தக் கருத்தை முன்வைத்தார்.