ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை

1 mins read
3c19cf31-34ba-45e7-897d-76957234f5d5
உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சாரா ஆன் ஹில்டெபிராண்ட்டை வினேஷ் வீழ்த்தினார். இதன் மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை இவரைச் சேருகிறது. படம்: United World Wrestling -

நூர் சுல்தான்: 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி பெற்றுள்ளார்.

கஸகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நேற்று நடைபெற்ற உலக வெற்றியாளர் மல்யுத்த போட்டியில் சில அதிசயமான தற்காப்பு முறைகளை வெளிப்படுத்தி, உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சாரா ஆன் ஹில்டெபிராண்ட்டை வினேஷ் வீழ்த்தினார்.

இதன் மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை இவரைச் சேருகிறது.