பிரமிக்க வைத்த பிரேசில் வீரர்

கார்க்கிவ் (உக்ரேன்): சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழு 3-0 என்ற கோல் கணக்கில் உக்ரேனின் ஷக்தர் டோனட்ஸ்க் குழுவைத் தோற்கடித்தது.

சிட்டி சார்பில் ரியாத் மாரெஸ், இல்காய் குண்டோவான், கேப்ரியல் ஜேசுஸ் ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலை அடித்தனர்.

வழக்கமாக மத்தியத் திடல் பகுதியில் விளையாடக்கூடிய பிரேசில் ஆட்டக்காரர் ஃபெர்னாண்டினோ, சிட்டி குழுவில் தற்காப்பு வரிசையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக நேற்று அதிகாலை நடந்த இந்த ஆட்டத்தில் தற்காப்புப் பகுதியில் களமிறக்கப்பட்டார்.

ஜான் ஸ்டோன்ஸ், அய்மெரிக் லபோர்ட்டே ஆகியோர் காயமடைந்த நிலையில் நிக்கலஸ் ஓட்டாமெண்டி மட்டுமே உடற்தகுதியுடைய வீரராக இருந்தார்.

ஆயினும், ஃபெர்னாண்டிடோவின் செயல்பாட்டைக் கண்டு சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலாவே பிரமித்துப் போனார்.

“தற்காப்பில் அபாரமாகச் செயல்பட்டோம்; கோல் வாய்ப்புகளையும் உருவாக்கினோம். தற்காப்பைப் பொறுத்தமட்டில் எங்களுக்குப் பல தெரிவுகள் இல்லை. ஃபெர்னாண்டினோவைத் தான் களமிறக்க வேண்டி இருந்தது. அவர் புத்திசாலித்தனமான, சாமர்த்தியமிக்க, நம்ப முடியாத அளவு திறமை படைத்த ஆட்டக்காரர். அனுபவமிக்க ஆளுமை அவர். எங்களுக்கு அவர் மிக மிக முக்கியம்,” என்றார் கார்டியோலா.

இந்தப் பருவத்தின் தொடக்கத்திலிருந்தே தற்காப்பில் பயிற்சி பெற்று வருவதாகக் குறிப்பிட்டார் ஃபெர்னாண்டினோ.

“எங்களது குழுவைப் பற்றி, வீரர்களைப் பற்றி கார்டியோலா நன்கு அறிந்துள்ளார். இன்று (நேற்று) எனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டேன். வரும் காலத்திலும் என்னை மெருகேற்றிக்கொள்வேன் என நம்புகிறேன்,” என்று அவர் சொன்னார்.

பாடம் கற்றுக்கொள்ளவில்லை:

இதனிடையே, ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் - ஒலிம்பியாக்கோஸ் குழுக்கள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஹேரி கேன், லூக்கஸ் மோரா ஆகியோர் அடித்த கோல்கள் மூலம் 2-0 என முன்னிலைக்குச் சென்றபோதும் வெற்றிபெறத் தவறியதால் ஸ்பர்ஸ் நிர்வாகி பொக்கெட்டினோ விரக்தி அடைந்தார்.

கடந்த ஐந்தாண்டுகளாக ஒரே மாதிரியான தவறுகளைத் தாங்கள் இழைத்து வருவதாகவும் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் ஆதங்கப்பட்டார் ஹேரி கேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!