மூவர் இருந்தும் முடியவில்லை: ரியால் நிர்வாகி ஸிடான் வருத்தம்

பாரிஸ்: பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மேன் (பிஎஸ்ஜி) குழுவிற்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் பிரபல ஸ்பானிய குழுவான ரியால் மட்ரிட் 3-0 என்ற கோல் கணக்கில் தோற்று அதிர்ச்சியளித்தது.

ரியாலின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கினார் அக்

குழுவின் முன்னாள் ஆட்டக்காரரும் இந்நாள் பிஎஸ்ஜி வீரருமான ஏங்கல் டி மரியா. அவர் இரண்டு கோல்களை அடித்தார். இன்னொரு கோலை தாமஸ் மியூனியர் போட்டார்.

இந்த ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் ரியால் குழுவினர் ஒருமுறைகூட பிஎஸ்ஜியின் வலையை நோக்கிச் சரியாக பந்தை உதைக்கவில்லை. இது ரியால் நிர்வாகி ஸினடின் ஸிடானுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

“கேரத் பேல், கரிம் பென்சிமா, ஈடன் ஹசார்ட் என மூன்று முன்னணி ஆட்டக்காரர்கள் இருந்தும் கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் போனது கவலை தருகிறது,” என்றார் ஸிடான்.

பிஎஸ்ஜி குழுவினர் தங்களைவிட எல்லாத் துறைகளிலும், குறிப்பாக மத்தியத் திடல் பகுதியில் மேம்பட்ட செயல்பாட்டை வெளிப்படுத்தினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ஹெக்டர் ஹெரேரே கடைசி நிமிடத்தில் போட்ட கோலால் யுவென்டசுக்கு எதிரான ‘டி’ பிரிவு ஆட்டத்தை 2-2 என்ற கணக்கில் அட்லெட்டிகோ மட்ரிட் சமன் செய்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!