நூர்சுல்தான்: உலக மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா மங்கோலிய வீரரை 8-7 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.
கஸக்ஸ்தான் தலைநகர் நூர்சுல்தானில் உலக மல்யுத்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கத்திற்கான சுற்றில் மங்கோலியாவைச் சேர்ந்த கிராப்லெரை எதிர்கொண்டார்.
பஜ்ரங் புனியா ஒரு கட்டத்தில் 0-6 எனப் பின் தங்கியிருந்தார். இருப்பினும் துவண்டுவிடாமல் போராடிய அவர், சரிவிலிருந்து மீண்டு வந்து 8-7 என வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
கடந்த ஆண்டு வெள்ளிப்
பதக்கமும் 2013ஆம் ஆண்டில் வெண்கலப் பதக்கமும் அவர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் உலக மல்யுத்தப் போட்டியில் அவர் மொத்தம் மூன்று பதக்கங்கள் வென்றுள்ளார்.

