எதிர்பார்த்த பலனைத் தராத கோஹ்லியின் முடிவு

எதிர்பார்த்த பலனைத் தராத கோஹ்லியின் முடிவு

2 mins read
c717d7a0-2b1d-41c5-a0bc-993cba9d2157
இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி (இடது). படம்: விராத் கோஹ்லி டுவிட்டர் -

பெங்களூரு: அனைத்துலக டி20 போட்டிகளைப் பொறுத்தமட்டில், பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் நடந்த போட்டிகளில் பூவா தலையாவில் வென்ற எந்த ஓர் அணித்தலைவரும் முதலில் பந்தடிப்பைத் தேர்வு செய்தது இல்லை.

இப்படியிருக்க, அந்த வழக்கத்தை மாற்றி, வரலாற்றை மாற்றி எழுத முயன்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்குத் தோல்வியே கிட்டியது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தாக, இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த மூன்றாவது, கடைசி ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியது.

முதலில் பந்தடித்த இந்திய அணி தொடக்கத்தில் சற்றுத் தாக்குப் பிடித்தபோதும் இன்னிங்சின் பிற்பாதியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக அந்த அணியால்

20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி 19 பந்துகள் எஞ்சியிருந்த நிலை

யிலேயே, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிக்கோட்டைத் தொட்டது.

இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்த அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் பியூரன் ஹென்ரிக்ஸ் ஆட்ட நாயகனாகவும் ஆட்டம் இழக்காமல் 79 ஓட்டங்களை விளாசிய அணித்தலைவர் குவின்டன் டி காக் தொடர் நாயகனாகவும் தேர்வு பெற்றனர்.

போட்டிக்குப் பின் பேசிய கோஹ்லி, "டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் வரையிலும் பூவா தலையாவில் வென்றால் முதலில் பந்தடிப்பது என முடிவு செய்து, அதன்படி செயல்பட்டோம். இதுபோன்ற முயற்சிகளில் எதிர்மறையான முடிவுகள் கிடைக்கும்போதுதான் அதற்கேற்ற பதில்களைக் கண்டுபிடிக்க முடியும். இளம் வீரர்கள் சிறப்பாகவே ஆடினர். அவர்களுக்கு இன்னும் சில போட்டிகளில் வாய்ப்பு அளித்துப் பார்க்க வேண்டும்," என்றார்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.