லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 3ஆம் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் விளையாடுகிறது.
நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து விக்கெட்காப்பாளரும் பந்தடிப்பாளருமான பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால் டி20 போட்டிக்கான அணியில் அவர் தொடர்ந்து இடம் பெற்றுள்ளார். டெஸ்ட் அணியைப் பலப்படுத்துவதற்காக இந்த மாற்றத்தை இங்கிலாந்து தேர்வுக் குழு செய்துள்ளது.
நான்கு புதுமுக வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர். தொடக்க வீரர்களான ஜாக் கிரவுலி டாம் சிப்லே, வேகப்பந்து வீரர் சகீப் மகமுத், சுழற்பந்து வீரர் பார்சின்கா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி வீரர்கள் வருமாறு:-
ஜோரூட் (அணித் தலைவர்), ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டுவர்ட் பிராட், பர்னஸ், பட்லர், கிரவுலி, சாம் குரன், டென்லி, ஜேக் லீச், சகீப்மகமூத், பார்க்கின்சன், ஒலி போப், டோமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், கிரிஸ் வோக்ஸ்.
டி20 அணி வீரர்கள்:- 1. மோர்கன், 2. பேர்ஸ்டோவ், 3. டாம் பான்டோன், 4. சாம் பில்லிங்ஸ், 5. பேட் பிரவுன், 6. சாம் குர்ரன், 7. டாம் குர்ரன், 8. ஜோ டென்லி, 9. லெவிஸ் கிரேகோரி, 10. கிறிஸ் ஜோர்டான், 11. சாகிப் மெஹ்மூத், 12. தாவித் மலன், 13. மேத்யூ பார்கின்சன், 14. அடில் ரஷித், 15. ஜேம்ஸ் வின்ஸ்.

