ரக்பி: வாயிலை நோக்கி ஃபிஜி

ரக்பி: வாயிலை நோக்கி ஃபிஜி

1 mins read

தோக்கியோ: முன்னணிக் குழுக்களில் ஒன்றான ஃபிஜி, ரக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் சுற்றுடன் வெளியேறும் நிலையை நெருங்கியுள்ளது.

மொத்தம் 20 நாடுகள் நான்கு பிரிவுகளாகப் பங்குகொள்ளும் அந்தத் தொடரில், ஃபிஜி 'டி' பிரிவில் ஆஸ்திரேலியா, உருகுவே, வேல்ஸ், ஜார்ஜியா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

கடந்த 21ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 39-21 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றுப்போன, உருகுவேக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கட்டாயமாக வெல்லவேண்டிய சூழலில் இருந்தது.

அதற்கேற்ப தொடக்கத்தில் அபாரமாக ஆடி புள்ளிகளைப் பெற்றது ஃபிஜி. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அதிரடியாக மீண்டெழுந்த உருகுவே முதல் பாதியிலேயே முன்னிலையைப் பெற்றது. இறுதியில், 30-27 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியையும் அக்குழு தன்வசப்படுத்தியது.

இப்போது இரண்டு புள்ளிகளை மட்டும் பெற்று நான்காம் நிலையில் இருக்கும் ஃபிஜி, எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் போனஸ் புள்ளிகளுடன் வென்றால் மட்டுமே காலிறுதிக் கனவு சாத்தியமாகும்.