இந்தியா-இலங்கை டி20: போட்டிகளின் அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

இந்தியா-இலங்கை டி20: போட்டிகளின் அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

1 mins read

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஸிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் என அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர் ஸிம்பாப்வே அணியின் அங்கீகாரத்தை அனைத்துலக கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தற்காலிகமாக ரத்து செய்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நிராகரித்தது.

அதற்குப் பதிலாக இலங்கை அணியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வந்து விளையாடும்படி அழைப்பு விடுத்தது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தையின்போது, இலங்கை அணி இந்தியா வந்து மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் போட்டி ஜனவரி 5ஆம் தேதி கவுகாத்தியிலும், 2-வது போட்டி ஜனவரி 7ஆம் தேதி இந்தூரிலும், 3வது போட்டி ஜனவரி 10ஆம் தேதி புனேவிலும் நடைபெற உள்ளது.