கடிகாரம் திருடிய காற்பந்து வீரர்

கடிகாரம் திருடிய காற்பந்து வீரர்

1 mins read

பாரிஸ்: பிரான்சின் முதல்நிலை காற்பந்து லீக் குழுக்களில் ஒன்றான நீஸ் குழுவிற்காக விளையாடி வருபவர் லாமின் டியாபி ஃபடீகா, 18. தாக்குதல் ஆட்டக்காரரான இவர், வீரர்களுக்கான உடை மாற்றும் அறையில் சக ஆட்டக்காரர் காஸ்பர் டோல்பர்க்கின் கைக்கடிகாரத்தைத் திருடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கடிகாரத்தின் மதிப்பு 70,000 யூரோ (S$105,700) எனச் சொல்லப்படுகிறது.

தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், அதற்காக டோல்பர்க், நிர்வாகி பேட்ரிக் வியரா ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாராம். அத்துடன், அந்தக் கடிகாரத்திற்குரிய பணத்தைத் தரவும் அவர் இணங்கினார். வளர்ந்து வரும் திறமையான வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ஃபடீகா, தமக்கு 13 வயதாக இருக்கும்போது நீஸ் பயிலகத்தில் சேர்ந்தார். பிரான்சின் 16, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அணிகளையும் அவர் பிரதிநிதித்துள்ளார்.