மட்ரிட்: பிரெஞ்சுக் காற்பந்து ஆட்டக்காரரான அன்டுவான் கிரீஸ்மன், அட்லெட்டிகோ மட்ரிட் குழுவில் இருந்து பார்சிலோனா குழுவிற்கு மாறிய விவகாரத்தில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறி, ஸ்பானிய காற்பந்துச் சங்கம் பார்சிலோனாவிற்கு 300 யூரோ அபராதம் விதித்து உள்ளது. இந்த விவகாரத்தில் கிரீஸ்மன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் சங்கம் தெளிவுபடுத்தியது. அபராதத் தொகை சிறியதாக இருந்தபோதும் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய பார்சிலோனா முடிவு செய்திருப்பதாக 'ஈஎஸ்பிஎன்' செய்தி தெரிவிக்கிறது.
பார்சாவிற்கு 300 யூரோ அபராதம்
1 mins read

