போக்பா காயம்; சோல்சியாருக்கு நெருக்கடி

போக்பா காயம்; சோல்சியாருக்கு நெருக்கடி

1 mins read
ada58edf-00a9-4706-a1da-621b99893b9f
ரோச்டேல் குழுவுக்கு எதிரான லீக் கிண்ண ஆட்டத்தில் போக்பா காயம் அடைந்தார். காயம் காரணமாக அவரது கணுக்கால் வீக்கம் அடைந்திருப்ப தாக யுனைடெட் குழுவின் நிர்வாகி சோல்சியார் தெரிவித்தார். படம்: ஏஎஃப்பி -

மான்செஸ்டர்: வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டும் ஆர்சனலும் மோதுகின்றன.

இந்த ஆட்டம் யுனைடெட்டின் ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டரங்கத்தில் சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிலையில், யுனைடெட்டின் நட்சத்திர வீரர் பால் போக்பா மீண்டும் காயமடைந்திருப்பது அக்குழுவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் லீக் கிண்ணப் போட்டி ஆட்டத்தில் ரோச்டேல் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் போக்பாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

காயம் காரணமாகக் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து போக்பா களமிறங்கவில்லை.

ரோச்டேலுக்கு எதிராக அவர் விளையாடியபோது ரசிகர்களின் முகங்கள் மலர்ந்தன. ஆனால் அவர்களது மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

அந்த ஆட்டத்தில் காயம் ஏற்பட்டும் ஆட்டம் முடியும் வரை போக்பா விளையாடினார். ஆனால் ரோச்டேலுக்கு எதிராக அவர் பெனால்டி எடுக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரவு விருந்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

கணுக்காலில் ஏற்பட்ட காயத்தினால் இரவு விருந்தில் போக்பா கலந்துகொள்ளவில்லை என்று யுனைடெட்டின் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

ஏற்கெனவே போதுமான தாக்குதல் ஆட்டக்காரர்கள் இல்லாமல் தவிக்கும் சோல்சியாருக்கு போக்பாவின் நிலை மேலும் நெருக்கடியைத் தந்துள்ளது.

காயமடைந்திருக்கும் மார்சி யாலும் ரேஷ்ஃபர்ட்டும் ஆர்சன லுக்கு எதிரான ஆட்டத்துக்குத் தயாராக இருப்பார்களா என்று உறுதியாக தெரியவில்லை. அவர்கள் விளையாடாவிட்டால் மேசன் கிரீன்வுட் களமிறங்குவார் என்று நம்பப்படுகிறது.