ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவரானார் அசாருதீன்

ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவரானார் அசாருதீன்

1 mins read

ஹைதராபாத்: ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட முகம்மது அசாருதீன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் நேற்று ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் தலைவரான முகம்மது அசாருதீன், பிரகாஷ் சந்த் ஜெயின் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் முகம்மது அசாருதீன் 147 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ் சந்த் ஜெயின் 73 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

சங்கத் தலைவர் பதவி தமக்கு பெரிய பொறுப்பைத் தந்திருப்பதாக முகம்மது அசாருதீன் தெரிவித்தார்.